2025 மே 05, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்ததில் கொத்தனார் பலி

Mayu   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிவத்த பகுதியில் மதில் அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மண்மேடு விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொழிலில் கொத்தனார் தொழிலாளியான இவர், சனிக்கிழமை (24) மாலை அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

கடும் சிரமங்களுக்கு மத்தியில் மீ்ட்கப்பட்ட அவர்,  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

திகன, ரஜவெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 49 வயதான, ஈ.எம்.பி.டபிள்யூ. ஏகநாயக்க என்பவரே மரணமடைந்தார் எனத் தெரிவித்த  கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X