2025 மே 15, வியாழக்கிழமை

மது போதையில் பஸ்ஸை ஓட்டிய சாரதி கைது.

R.Maheshwary   / 2023 ஜனவரி 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைத்த  தகவலுக்கு அமைய, நல்லதண்ணி நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி,  விசாரணைகளின்  பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

அத்துடன் சாரதியை நாளை  (18)  திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .