2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

வலப்பனை- நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி - பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமுதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  சுட்டிக்காட்டினர்.

குறித்த நகரத்துக்கு பல அத்தியாவசிய விடயங்கள் தேவைப்படும் நிலையில் எதற்காக மதுபானசாலை திறப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன்,  அந்த அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால்  நில்தண்டாஹின்னா நகரின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்ததுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .