Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன், டீ.சந்ரு, எஸ்.சதிஸ், சிவாணஸ்ரீ
மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில், 1,082 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, மத்திய மாகாண சபை மேற்கொண்ட முயற்சியின் பயனாக, 742 பட்டதாரிகள், ஆசிரியர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
கண்டி, விஜயராம கல்லூரியின் பிரதான மண்டபத்தில், மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதன்பின்னர் நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது.
நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 340 பட்டதாரிகளுக்கே, ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாணக் கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .