Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
மத்திய மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, 47 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையில், இந்த விசேட குழுக்கள் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் 129 ஹெரோயின் வழக்குகள், 31 ஐஸ் தொடர்பான வழக்குகள், 199 கஞ்சா வழக்குகள் மற்றும் 234 வெவ்வேறு போதைப்பொருள் வழக்குகள் குறித்த பிரிவுகளுக்குள் நடத்தப்பட்டுள்ளதாகவும்இந்த நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.
6 minute ago
34 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
55 minute ago