Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 03 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறுவர்களின் மந்தப்போசணையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய போசணை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்று, மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா சினிசிட்டா அரங்கில், சர்வதேச சிறுவர் தினமான, ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகளில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தேசிய அளவில் ஒப்பிடுகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்களின் மந்த போசணை நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. இது சிறுவர்களின் சுகாதார நிலைக்கு ஆரோக்கிய தன்மை இல்லை” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த கால ஆட்சியாளர்கள் இவற்றை கண்டு அமைதி காத்ததாகவும் ஆனால், தனது அமைச்சின் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய போசணை உணவு அறிமுகப்படுத்த
ப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள் என்றும் தன்னை போன்று சிறுவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்ற வேண்டுமாயின் அவர்களின் போசணை மற்றும் கல்வி தொடர்பில் அதிக கரிசனை கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் கூறினார்.
“சிறுவர்களின் நலன்கருதி அவர்களை, லயத்து வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு மாற்ற தனது அமைச்சு மூலம் தனிவீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அமைச்சின் நிதியின் ஊடாகவும் உலக வங்கி நிதி ஊடாகவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“தான், பல சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நிலையில் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறான விமர்சனங்களினால், மலையக மக்கள் ஏமாறக் கூடாது, என்றும் தொடர்ந்தும் தனது திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
“சர்வதேச சிறுவர் தினத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போசணை பிஸ்கட், முதல்கட்டமாக தொடர்ந்து 8 மாதங்களுக்கு வழங்கப்படும். அதற்கென 80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago