Editorial / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, செ.திவாகரன்,ஆ.ரமேஸ்
மனைவி, கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
விஜித்தபுர மார்காஸ்தோட்டத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளதை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 28பி விஜிதபுர பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பாத்திமா ரிஸ்வானா கைது செய்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
49 minute ago
1 hours ago