2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மயக்கமடைந்து விழுந்த 44 மாணவிகள்

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை-  கும்பியாங்கொடை சுஜாதா மகளிர் கல்லூரியின் மாணவிகள் 44 பேர் இன்று  (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாணவிகள் என்பதுடன், வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இன்று காலை பாடசாலையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்ட போதே, மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவிகளின் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .