R.Maheshwary / 2022 மார்ச் 31 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
அதிக வேகமாகப் பயணித்த லொறியொன்று, பாடசாலைக் கட்டடமொன்றின் மீது விழுந்ததால் லொறியின் சாரதி மற்றும் உதவியாளும் காயமடைந்து பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பொகவந்தலாவை- பலாங்கொட பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை – பெட்ரசோ தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த குறித்த லொறி, வீதியின் கீழே 150 அடி பள்ளத்தில் இருந்த கெம்பியன் தமிழ் வித்தியாலய பாடசாலைக் கட்டடத்தின் மீது புரண்டு விழுந்துள்ளது.
லொறி இவ்வாறு புரண்ட போது, அக்கட்டடத்துக்குள் மாணவர்கள் சிலர் இருந்துள்ள நிலையில், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
எனினும் அப்பாடசாலைக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது.
லொறியின் சாரதியும் உதவியாளும் மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.


18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026