2024 ஜூன் 17, திங்கட்கிழமை

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

Editorial   / 2024 மே 27 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக   மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக   பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ.480, முருங்கை காய் ரூ.720, கேரட் ரூ.240,   மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, புடலங்காய்  ரூ.320,  பூசணி ரூ.160, கத்தரிக்காய் ரூ.240, முட்டைகோஸ் ரூ.240, வெண்டைக்காய் ரூ.400, மரவள்ளி கிழங்கு ரூ.200 என  விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X