2025 மே 15, வியாழக்கிழமை

மரக்கறிகளின் சில்லறை விற்பனை விலை அதிகரிப்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து மரக்கறிகளை கொண்டு சென்று சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென,  ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல  ஆகிய பொருளாதார மையங்களில் இருந்து மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு அதிக பணம் செலவாகும் என்பதுடன்,  இவ்வாறு மரக்கறிகளை கொண்டு சென்று தமது வர்த்தக நிலையங்களில் இறக்கும் போது இறக்குபவர்களுக்கு அதிகம் பணம் செலுத்த வேண்டி ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறைந்த சில்லறை விலையில் நுகர்வோருக்கு விற்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .