2025 மே 17, சனிக்கிழமை

மரக்கறிகளின் விலை தொடர்ந்து உயரும் அபாயம்

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கு ஏற்ப மரக்கறிகளை வழங்க முடியாத காரணத்தினால், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.

 கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டின் ஆட்சியாளர்களினால் நாட்டின் விவசாயத்துக்கு ஏற்பட்ட அழிவுகளினால் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டிருந்த சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலர் தற்போது மரக்கறிச் செய்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இக்காலத்தில் ஒரு கிலோ கிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 440 ரூபாவுக்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதுடன், கரட், வெண்டைக்காய் உள்ளிட்ட மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் அதிக கொள்முதல் விலையினால் மரக்கறிகளின் சில்லறை விலையும் அதிகரித்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு வெளியில் உள்ள மாகாணங்களில் உள்ள பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்தம் இரண்டரை இலட்சம் கிலோ கிராம் மரக்கறிகள் விநியோகிக்கப்பட்ட போதிலும் தற்போதைய நிலைமை காரணமாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்த மரக்கறி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நுவரெலியா பிரதேசத்தில் இரசாயன உரம் விற்பனை செய்யும் கடைகளில் ஐம்பது கிலோ கிராம் இரசாயன உரம் மூட்டை இருபத்து மூவாயிரம் ரூபாய் என்ற  அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அந்த விலைக்கு இரசாயன உரங்களை கொள்வனவு செய்து மரக்கறிகளை பயிரிட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

இந்நாட்டு விவசாயிகளுக்கு பசுமை வீடுகள், நவீன விவசாய உபகரணங்கள் மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் தொழில்நுட்பம் போன்றவற்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்த போதிலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .