R.Maheshwary / 2022 மே 19 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மலையக நகரங்களில் மரக்கறிகளின் விலை பல மடங்குகளாக அதிகரித்துள்ளன.
கேள்விகளுக்கு ஏற்ப உற்பத்தியாளர்களால் மரக்கறிகளை விநியோகிக்க முடியாமையே மரக்கறி விலை அதிகரிப்புக்கு காரணம் என மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, ஹட்டன் நகரில் தக்காளி ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும் கரட்- 400ரூபாய்க்கும் கறிமிளகாய் – 400 ரூபாய்க்கும் கத்தரிக்காய்- 450 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு 300 ரூபாய்க்கும் பச்சை மிளகாய்- 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தாழ்நிலப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளன.
மரக்கறி உற்பத்திக்கு தேவையான உரம் கிடைக்காமை, களை கொல்லிகளுக்கு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago