R.Maheshwary / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் வேலை நிறுத்தம் காரணமாக, கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று மரக்கறிகளின் குறைந்தளவே கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வருகைத் தரும் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார நிலையங்களும் மூடப்படவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் நாட்டில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago