Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
ஹல்துமுல்லை தடயம்பொல கிராமத்திலுள்ள வீடொன்றின் மீது, மரமொன்றின் கிளை புதன்கிழமை இரவு முறிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 9 வயது மகள் உட்பட பெற்றோர் இருவரும், படுகாயமடைந்துள்ளனர். அவர்கள், ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக மழையுடன் கூடிய கடுங்காற்றுடன் வீசியதனால், மேற்படி வீட்டுக்கு அருகிலிருந்த பாரிய மரமொன்றின் கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளதாகவும் வீட்டின் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த மேற்படி மூவரையும் பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், மேற்படி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாவட்டதில் நீடித்துவரும் அடைமழையால், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழக்கூடிய அபாயங்கள் நிலவுவதாகவும், எனவே, இவை குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .