2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரண வீட்டில் மோதல்: பொது மக்கள் ஆவேசம்;முக்கிய பிரமுகர்கள் கைது

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை - மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள தோட்டத்தில் நேற்று (05) மாலை தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் மந்தார நுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரர் கீர்த்தி குடாபண்டார ரத்நாயக்கா, ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் அஜீத் மற்றும் பிரதேச வாசியான சிந்திகக  ஆகியோரை இன்று அதிகாலை நான்கு மணியலவில் கைது செய்துள்ளதாக மந்தாரம்நுவர பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் இந்த தாக்குதல் சம்பவத்தினால் மந்தாரம்நுவர,எலமுள்ள,மற்றும் கபரகலை வாசிகள் என 200 க்கு மேற்பட்டவர்கள் மந்தாரம்நுவர தியகலஹீனையில் அமைந்துள்ள முன்னால் அமைச்சர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரரின் வீடு,பிரதேச சபை உறுப்பினரின் வீடு மற்றும் வாகனம் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியும் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

எலமுள்ளை தோட்டத்தில் மரண வீடுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நிலையில்,
 எலமுள்ள மற்றும் கபரகலை வாசிகளுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இவ் வாக்குவாதம் சண்டையாக மாறி கைகலப்பாகியதில் இரண்டு இளைஞர்களை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்காவின் சகோதரர் கீர்த்தி குடாபண்டார ரத்நாயக்கா, ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் மாட்டு கட்சி உறுப்பினர் அஜீத் மற்றும் பிரதேச வாசியான சிந்திகக  ஆகியோர் தாக்கியுள்ளனர்.

இதன் பின் ஒன்று சேர்ந்த 200 க்கு மேற்பட்ட பிரதேச வாசிகள் இவர்களை விரட்டியதுடன் இவர்களின் வீடுகள், வாகனம் ஒன்றையும் தாக்கி உடைத்துள்ளனர்.

அதே நேரத்தில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உயர் மட்ட பொலிஸார் மேற்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களை வலப்பனை நீதிமன்ற மன்றில் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .