2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

மரத்தை அகற்ற கோரிக்கை

Freelancer   / 2023 நவம்பர் 19 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் சீமைக்கருவேல மரமொன்று முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சீமைக்கருவேல மரத்தை வெட்ட பிரதேச மக்கள்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை கோரிக்கைகளை முன்வைத்தும்அதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டன்சின் நகரின் பிரதான சாலையின் ஒருபுறம் உயர் அழுத்த மின்கம்பிகள் மற்றும் 100 அடி உயரமுள்ள தொலைபேசி இணைப்புகளுக்கு குறித்த மரம்  அருகில் அமைந்துள்ளது

இதேவேளை, அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மரத்தின் பல கிளைகள் சேதமடைந்துள்ளதாகவும், மரம் சாலையில் விழும் அபாயம் உள்ளதால், மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  M 

ரஞ்சித் ராஜபக்க்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X