2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மரம் விழுந்ததால் நகராமல் நிற்கும் மெனிக்கே

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழைக்காரணமாக, வட்டவளை மற்றும் கலபொடவுக்கு இடையில் பாரிய மரமொன்று தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மலையத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (15) காலை 8.30 க்கு பதுளையை நோக்கி புறப்பட்டுச் சென்ற உடரட்ட மெனிக்கே கடுகதி ரயில், பிற்பகல் 1 மணியில் இருந்து கலபொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கை பிற்பகல் 3 மணியளவில் நிறைவுறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ​போதிலும். அந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X