2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மருந்தெடுக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 29 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

சிகிச்சைக்காக பொகவந்தலாவை பி​ரதேச வைத்தியசாலைக்குச்  சென்ற  3 பிள்ளைகளின் தந்தையொருவர், காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்தும் கெசல்கமுவ ஆற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவானை தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதான பெரியண்ணன் கருப்பையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

​இன்று (29) காலை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கிளினுக்கு செல்வதாக தெரிவித்து, கெசல்கமுவ ஆற்றின் ஊடாக செல்லும் குறுகிய பாதை ஊடாக பயணித்துள்ள நிலையில், ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X