2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மறந்து போன டயகம வீதி புனரமைப்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

லிந்துலை நகரத்தில் இருந்து டயகம நகரம்  வரை செல்லும் 21 கிலோமீற்றர் வீதியானது, மழைக்காலங்களில் வீதி எது,  குழி  எதுவென தெரியாத அளவிற்கு  சேதமடைந்து காணப்படுகின்றது.

தலவாக்கலை நகரத்திலிருந்து டயகம நகருக்கு பஸ்ஸில் செல்வதற்கு ஒரு மணித்தியாலயம்  எடுத்த காலம் மாறி, தற்போது வீதி பழுதடைந்துள்ளதால் இரண்டு மணித்தியாலம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த அமரர் ஆறுமுகம் தொண்டமானால் வீதி நிர்மாண பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, வீதியின் இரண்டு பக்கங்களும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்ற போதிலும் அமைச்சரின் மறைவுக்கு பின்னர் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த வீதி அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடும் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றத்தால் இந்த வீதி அபிவிருத்தி பணிகள் கைவிடப்பட்டு இன்று மக்களின் போக்குவரத்துக்கு பாரிய பிரச்சினையை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 எனவே, பிரதேச மக்களின் போக்குவரத்து நலம் கருதி பாதையை புனரமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X