R.Maheshwary / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஹய்பொரஸ்ட் -காவத்தை தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலம் இன்று (11) காலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
காவத்தை தோட்டத்திலுள்ள விவசாய காணி ஒன்றின் பற்றை காட்டுக்கு அருகிலிருந்து சிறுத்தையின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதென ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுத்தை ஏழு அடி நீளம் கொண்டதாகவும் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் உயிரிழந்து மீட்கப்பட்ட சிறுத்தைகளில் இதுவே அதிக எடை கொண்ட சிறுத்தை எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.
மரக்கறிகளை பன்றிகளிமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி, கழுத்து இறுகி சிறுத்தை உயிரிழந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026