Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் இனந்தெரியாதோர்களினால் பற்றைக் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தின் கடவளை தொடக்கம் தியகல வரையுள்ள சுமார் பல ஏக்கருக்கு வைக்கப்பட்ட தீயானது நேற்று மாலை வரை பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதன் போது சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதிகளில் உள்ள பற்றைக்காடுகள் நாசமடைந்துள்ளது.
அதேபோல் வட்டவளை மௌன்ஜீன் தோட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகளுக்கும் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் அப்பகுதியிலுள்ள சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பற்றைக்காடுகளும் எரிந்து நாசமடைந்துள்ளன.
மலையகத்தில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்றது. இதனை பயன்படுத்திக்கொண்டு பற்றைக்காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு பற்றைக்காடுகளுக்கு தீ வைப்பதினால் அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள் மற்றும் பூச்சியினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. (R)
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026