Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கொழும்பு - சுகததாச விளையாட்டரங்கில் கடந்த 19ஆம் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற srilanka master athletic 35வது மெய்வல்லுனர் போட்டியில் மலையக இளைஞன் பல சாதனைகளை படைத்துள்ளார்.
நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவை, எமஸ்ட் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் என்ற இளைஞன் 5,000 மீட்டர் வேக நடை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், 3,000 மீட்டர் தடைத் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று நுவரெலியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது குறித்து சத்தியசீலன் கூறுகையில்,
“எனது முயற்சியால் போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளேன். குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை இருக்கின்ற போதிலும் குடும்பத்தில் உள்ளவர்களின் உதவியால் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற முடிகின்றது.
யாராவது வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நானும் சர்வதேச மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கு கொள்ள முடியும்” என்றார். (R)



5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026