2025 மே 15, வியாழக்கிழமை

மலையக சமூகத்தின் 'ஆதர்ஷ சிற்பி' போட்டிகள்

Editorial   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின்  சிரார்த்த தினத்தையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

கவிதைக்கான தலைப்புக்கள்.

    தடம் பதித்த தானைத் தலைவன்

    இலக்கு நோக்கி இனிய பயணத்தில் ஆறுமுகன் தொண்டமான்

    பாட்டாளி வடுதலையின் கூட்டாளி

    தவைரது புகழைச் சொல்ல நாள் போதுமா

    உழைப்போருக்கு தோழன், ஏய்த்து பிழைப்போருக்கு...

 

கட்டுரைக்கான தலைப்புக்கள்

 

    ஆளுமையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

    இன்றைய மலையகத்தின் இனிய நினைவுகளில் அவர்

    அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பாதை

    இளைய தலைமுறையின் இங்கிதமான வழிகாட்டி

    சமூக எழுச்சிக்கு வித்திட்ட வீரமகன்

போட்டிகளின் விதிமுறைகள்

    கவிதை 150 சொற்களுக்குள்ளும், கட்டுரை 800 சொற்களுக்குள்ளும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

    படைப்புக்கள் A4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். பெயர், முகவரி தனியாக ஒரு தாளில் எழுதப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

    அச்சு, இலத்திரணியல் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியானவை ஏற்றுக்கொள்ளப்பட மட்டாது.

படைப்புக்கள்; போட்டி ஏற்பாட்டாளர், இ.தொ.கா, இல 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு   பதிவுத் தபாலில் 15.03.2023க்கு முன்னர் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். மேலதிக தகல்களுக்கு 071-6876548 அல்லது  070-4329131 தொடர்பு கொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .