2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மலையக நகரங்களில் மண்ணெண்ணெய் வரிசைகள் தொடர்கின்றன

R.Maheshwary   / 2022 மே 04 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு பல நாள்களின் பின்னர், நேற்று  மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை எரிபொருள் கூட்டுதாபனத்தின் களஞ்சியசாலையிலிருந்தே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர்.

குறிப்பாக குறித்த நகரங்களை அண்மித்த பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

இவ்வாறு வரிசைகளில் காத்திருந்த அனைவருக்கும் தலா 10 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X