R.Maheshwary / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், ரஞ்சித் ராஜபக்ஸ
ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் இணைந்து நாட்டில் இன்று (28) காலை முதல் முன்னெடுக்கும் எதிர்ப்பு போராட்டத்தால் மலையக நகரங்களும் முடங்கின.
நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா ஆகிய நகரங்களில் முழுமையாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புசலாவை, வலப்பனை, நானுஓயா உள்ளிட்ட பல நகரங்கள் ஸ்தம்பித்துள்ளன.
அத்துடன், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தோட்ட தொழிலாளர்களும் பணி பஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
பிரதான நகரங்களின் வங்கிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
சில இ.போ.ச பஸ்களைத் தவிர தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன் இ.போ.ச பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்துள்ளதுடன், சிலர் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சகல பாடசாலைகளும் ஆசிரியர் வரவின்மையால் மூடப்பட்டுள்ளன.



6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago