R.Maheshwary / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
மலையக மக்களின் சமகால நிலைபாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் விரிவுரையாளருமான எஸ். விஜயச்சந்திரன் தலைமையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரூபி வுட்சைட் மற்றும் நரின் மரிக்காருடன் நுவரெலியாவில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ், தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது , மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அரசியல், வேலைவாய்ப்பு, சம்பளம்,குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச செயலகங்கள், கிராமசேவகர் பிரிவுகள் ,மாகாணசபை தேர்தல் உட்பட மலையக சமுக பிரச்சனைகளை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு மலையக மக்களின் சமகால நிலைமைகள் மக்களின் பிரச்சனைகள் தொடர்பான ஆவணமும் இக்கலந்துரையாடலின் போது கையளிக்கப்பட்டது.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago