Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வு எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் வராவிட்டால், தலைநகரையே ஸ்தம்பிக்கச் செய்யுமெனவும், அதற்கும் தாம் ஆயத்தமாக இருப்பதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மக்களின் அடிப்படைச் சம்பளம் அதிரிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் கோரிக்கை. நாம் எதிர்பார்க்கும் தொகையை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது காரணம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் மிக விரைவில் இது தொடர்பில் அறிவிப்போம் என்றார்.
அவர்கள் நிர்ணயிக்கும் விலையை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. முடிந்தால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருப்போமே தவிர, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கமாட்டோம் என்றார்.
இம்முறை நிறுவனங்கள் சொல்லும் தொகையை நாம் தொழிலாளர்களிடம் நேரடியாகச் சொல்லுவோம். தோட்டத்தொழிலாளர்கள் சரியென்று சொன்னால் மாத்திரமே தான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என்று தெரிவித்ததுடன், மக்களது எண்ணங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்பை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
22 minute ago