2025 மே 15, வியாழக்கிழமை

மலையக மக்கள் ஊறுகாய் அல்ல

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள்  ஊறுகாய் அல்ல  எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் , தேர்தல் காலங்களில் மட்டும் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு மலையக மக்களின் துயரங்கள் கண்ணெதிரே தோன்றுவது வேடிக்கையே  என்றார்.

மடுல்சீமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தீர்மானம் மிக்க இந்த தேர்தலில் மக்கள் மிக அவதானமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டை பாதாளத்தில் தள்ளிய ஒரு சில அரசியல் கட்சிகள் புதிய புதிய சின்னங்களில் ஓட்டுக்களை சிதறடிக்க  சூழ்ச்சிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் .

எனவே, உங்களில் ஒருவரை உங்களுக்காக தேர்ந்தெடுங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் என்னுடைய பசறை தேர்தல் தொகுதியில் மலையக இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளேன். என்னுடைய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அங்கே இடம் கிடையாது .

 மலையகம் 200 இவற்றையெல்லாம் மாற்றி புதியதொரு வரலாறு எழுத வேண்டும்.அதற்கு உங்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்துங்கள் என தெரிவித்தார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .