Ilango Bharathy / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட மலையக மக்களுக்கு சாதகமற்ற 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு எதிராக தன்னுடைய வாக்குப் பலத்தை பிரயோகித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்து தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், விமான வேகத்தில் அதிகரித்து செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலோ பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் தொடர்பிலோ அவர்களுடைய உட்கட்டமைப்பு வசதி தொழில் பிணக்குகள் கல்வி அபிவிருத்தி சுகாதாரம் இவை தொடர்பிலோ எதுவித சரத்துக்களும் உள்வாங்கப்படவில்லை.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த பட்ஜெட் தொடர்பான வாத விவாதங்கள் பாராளுமன்றத்தில்
எடுத்துக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து மலையக மக்கள் தொடர்பாக அவர்களுடைய சுகாதார
கல்வி உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி தொடர்பாக பல கருத்துக்கள் தன்னால்
எடுத்துரைக்கப்பட்டது.
எனினும் முறையான ஒரு தீர்வு இந்த பட்ஜெட்டில் உள்வாங்கப்படவில்லை என்பது பாரியதொரு
வேதனைக்குரிய விடயமாகும். ஆகவே இதற்கு எதிராக மலையக மக்கள் சார்பாக தன்னுடைய
வாக்கு பலத்தை பிரயோகித்தேன் என தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .