2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மலையக மக்கள் பின்தங்கியுள்ளனர் ’

Freelancer   / 2022 நவம்பர் 22 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம். என்று மலையக மக்கள் முன்னணியின தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நுவரெலியா – இராகலை பிரதேசத்தின் மலையக மக்கள் முன்னணியின் தோட்டதலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களுடான சந்திப்பு ஒன்று இன்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் நேற்றும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்டப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 63 சதவீத மக்கள் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கனவத்தை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அநுரகுமார திஸாநாயக்கவும், எமது தலைவர் மனோ கணேசனும் கூட்டு பிரேரணையொன்றை கொண்டுவந்தனர். இவ்விவாதத்தில் பங்கேற்று எமது மக்களின் பிரச்சினைகளை நாம் பட்டியலிட்டோம். 

எனினும், ஒரு சிலர் இதனை விமர்சிக்கின்றனர், மலையக மக்கள் பிற்படுத்தப்பட்ட சமூகம் அல்ல என குறிப்பிடுகின்றனர். இந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பது இந்தியாவில் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவது. அந்த முறை இலங்கையில் இல்லை. மலையக மக்கள் பின்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையே நாம் கூற விளைந்தோம்  என்று தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .