Freelancer / 2022 டிசெம்பர் 07 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இன்று (07) காலை ஹட்டன் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பாடசாலைகளுக்குச் சென்று ,மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து விடுவிக்க கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அதிகாரிகளுக்கு பணித்தார்.
அத்துடன், இந்த உத்தரவை மீறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மலையக தோட்டப் பகுதிகள், நகர் பகுதிகளில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபடாமல் இருக்க, .இதொ.கா அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago