2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன்

கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த புகையிரதம் இன்று (18) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. 

கண்டி - பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் இது தடம்புரண்டுள்ளது.

இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளன.

புகையிரம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சமிஞ்ஞை கட்டுப்பாட்டு தொகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த  புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்துவதற்காக நாவலபிட்டியிலிருந்து திருத்து குழுவினர் வருகை தரவுள்ளதாகவும், மிக விரைவில் புகையிரம் பயணங்கள் வழமைக்கு திரும்பவுள்ளதாக நவாலபிட்டி புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X