2025 மே 15, வியாழக்கிழமை

மலையகத்திலும் நோயாளர்கள் அவதி

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ, நடராஜா மலர்வேந்தன்

புதிய வரி சட்டத்துக்கு எதிராகவும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாட்டுக்கு எதிராகவும் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு காரணமாக மலையகத்தின் பல பகுதிகளிலுமுள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் செயலிழந்திருந்தன.

இதற்கமைய, டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஸ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும் அவசர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ரொசான் சிறிவர்தன தெரிவித்தார்.

புதிய வரி சட்டத்துக்கு எதிராகவும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுபாட்டுக்கு எதிராகவும் கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ​கொழும்புக்குச் சென்றிருப்பதாகவும் இதனால் வைத்தியசாலையின் வெ ளிநோயாளார் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதுடன், அவசர சிகிச்சைப் பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை பதுளை மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்நிலமைக் காணப்பட்டது.

வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெற செல்கின்ற நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்ற போதிலும் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளதை அவதானிக்க முடிந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .