Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெருந்தோட்டப் புறங்களில் மேற்கொண்ட ஒரு கணக்காய்வின்படி, 60 ஆயிரத்துக்கும் மேற்பட படித்த இளைஞர், யுவதிகள் தொழிலின்றியும், தமது வாழ்க்கையில் விரக்தியுற்ற நிலையிலும் காணப்படுகின்றார்கள். இவர்களின் இந்த அவல நிலைக்கு தோட்ட நிர்வாகங்களே காரணமாகும்” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் சிரேஷ்ட தொழில் உறவுகள் இயக்குனருமான எம்.வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.
சௌமிய பவனில், நேற்று (14) நடைபெற்ற கூட்டத்திலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கை முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட பெருந்தோட்டங்களை நாம் பார்க்கின்றோம். இவற்றில் படித்துவிட்டு தொழிலின்றி சுமார் 60 ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் ஒரு நிரந்தரமான தொழிலின்றி, கொழும்பு போன்ற புறநகர்களிலும் குறைந்த வருமானத்துக்கு தொழில் புரிந்து வருகின்றார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
“இத்தகையதோர் நிலைமைக்கு ஆளாக்கப்படுவதற்கு துணை போகின்றவர்கள் தோட்ட நிர்வாகங்களே. தோட்டக் கம்பனிகள் தோட்டங்களிலேயே இளைஞர்களது தகுதிக்கேற்ப தொழில் வழங்க முடியும். அப்படி தொழில் வழங்கப்பட்டிருந்தால் இவர்களது நிலை கேள்விக்குறியாக அமைந்திருக்காது.
“எனவே, தோட்டக் கம்பனிகளோடு பேச்சு வார்த்தை நடாத்தி, அவர்களின் தகுதிகளுக்கேற்ற தொழிலைப் பெற்றுக் கொடுக்க வலியுறுத்துவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .