2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் கடும் பனி; சாரதிகளுக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மலையத்தில் மழையுடன்  கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பல இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் பிரதான வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

குறிப்பாக ஹட்டன்- நுவரெலியா, ஹட்டன்- கொழும்பு, ஹட்டன்- பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா வீதிகளில் இந்த பனி நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .