2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மலையகத்தில் பரவும் நோய் தொடர்பில் எச்சரிக்கை

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 

மலையகத்தில் மிக வேகமாகக் கண் நோய் பரவி வருகின்றது. குறிப்பாக பாடசாலைகளை,சிறுவர் முன்பள்ளிகளுடாகவே . இந்நோய் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

இந்நோய் கண்களை பார்ப்பதினூடகவே பரவுகின்றது என்ற கருத்து சமூக மட்டத்தில் நிலவினாலும் வைத்தியர்களின் ஆலோசனைப் படி அவ்வாறில்லை என தெரிவிக்கின்றனர்.

கண்களில் இருந்து வருகின்ற நீர் ஏதோ ஒருவகையில் மற்றவரின் கண்களுக்குள் செல்வதினாலே பரவுவதாகக் கூறுகின்றனர்.

எனவே, கண் நோய்களுக்குப்பட்டவர்கள் வீட்டில் நோயுற்றவர்கள் பாவிக்கும் பொருட்களை விடயத்தில் ஏனையோர் அவதானத்துடன் செயல்படுவதோடு கண்களை தொடுவதற்கு முன்  கைகளை சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும்.

அத்துடன், நோய் தாக்கத்திற்குட்பட்டோர் வைத்திய ஆலோசனை பெறுவதோடு அவர்களும் சுத்தமாக இருப்பதில் கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X