2025 மே 15, வியாழக்கிழமை

மலையகத்தில் பல முன்னணி கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 22 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி  கொத்மலை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவில் தேசிய அடையாள அட்டை விடயத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இக்கட்சியின் வேட்புமனு  நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவத்தின் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவின் சமசமாஜ கட்சி அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு மாத்திரம் தாக்கல் செய்த  வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல வானூர்தி சின்னத்தில் வலப்பனை, கொட்டகலை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நோர்வூட்  மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு விமல் வீரவனசவின் கட்சியான சுதந்திர மக்கள் முன்னணி தாக்கல் செய்த  வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .