Mayu / 2024 ஜனவரி 15 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்துக்கான புகையிரத தண்டவாளத்தில் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா நிலையங்களுக்கு இடையில் திங்கட்கிழமை (15) பிற்பகல் 3 மணியளவில் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கண்டிக்கு வந்த விசேட புகையிரதத்திற்கு இவ்வாறு தடம்புரண்டுள்ளது. ரயிலின் பின்புறம் பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகிவிட்டது.
பதுளையில் இருந்து இயக்கப்பட வேண்டிய இரண்டு புகையிரதங்கள் இப்போது வரவுள்ளன. அவற்றில் ஒன்று பதுளைக்கு திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பதுளையிலிருந்து கண்டிக்கு இயக்கப்படவிருந்த ரயில் சற்று தாமதமாக இயக்கப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் இரண்டு புகையிரதங்கள் தலவாக்கலை மற்றும் ஹட்டனில் இருந்து கொழும்புக்கு திருப்பி விடப்படவுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன்படி, புகையிரத பயணிகளின் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில், ஹட்டனுக்கும் நானுவாய்க்கும் இடையில் புகையிரத பயணிகளை பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்வதற்காக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பி.கேதீஸ்

11 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
38 minute ago