2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மவுசாக்கலை நீர் தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 05 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதைக் கண்ட   மஸ்கெலியா- கிராப்பு தோட்டத் தொழிலாளர்கள் இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், மிதந்துக்கொண்டிருந்த 35 அல்லது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலத்தை  மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடலின் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை  மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .