2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மவுண்ட்ஜின் இளைஞனுக்கு தொற்று

Editorial   / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

வட்டவளை பகுதியில் இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 118 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அத்துடன், ஹட்டன் நகரிலுள்ள மூன்று கடைகள் மூடப்பட்டுள்ளன என  பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுக்கே  தொற்று இருப்பது நேற்று (18) உறுதியாகியுள்ளது.

தொற்றாளருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்த மேற்படி இளைஞனுக்கு கடந்த 16ஆம் திகதியன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் அறிக்கையிலேயே மேற்படி இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இதனையடுத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த 118 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  தொற்றாளர்கள் சென்றிருந்த ஹட்டன் நகரிலுள்ள மூன்று கடைகளும் சுய பூட்டப்பட்டு, அங்கிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X