R.Maheshwary / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி. பெருமாள்
மஸ்கெலியா - சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தேயிலை தொழிற்சாலை களஞ்சியசாலையிலிருந்து ஒரு தொகை கழிவுத் தேயிலை காணாமல் போனமைத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (8) கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், அதே தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் இன்று (9) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியசாலையிலிருந்து 448 கிலோ கிராம் கழிவுத் தேயிலை காணாமல் போயுள்ளதென மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில், கடந்த மாதம் 28ஆம் திகதி தோட்ட முகாமையாளரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு திருடப்பட்ட கழிவுத் தேயிலையின் பெறுமதி 1,34,000 ரூபாய் பெறுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
31 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
37 minute ago
43 minute ago