2025 ஜூலை 02, புதன்கிழமை

“மஹிந்தவின் அழைப்பை நிராகரித்து விட்டோம்”

Editorial   / 2017 நவம்பர் 10 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து, இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை" என, கல்வி இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் நாம் அவரது அழைப்பை நிராகரித்துவிட்டோம்” என்றும் அவர் கூறனார்.

கல்வி அமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வருகிறோம். அரசியல் ரீதியில் சாதகமான வழியையே தேர்ந்தெடுப்போம். யாருடன் இணைந்து போட்டியிட்டால், தமிழ் தரப்புக்கு சாதகமான நிலை ​ஏற்படும் என்பது தொடர்பில், வியூகம் மேற்கொண்டு வருகிறோம்..

“அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது, எங்களது நோக்கமல்ல. மஹிந்த தரப்பினரும் (பொதுஜன பெரமுண) தேர்தலில் இணைந்து ​போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டோம்.

“ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் அழைப்பு விடுத்துள்ளன. எனினும், தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறந்ததாக அமையும். எதிர்வரும் இரு வாரங்களில் எமது நிலைபாட்டை அறிவிப்போம்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .