2025 மே 05, திங்கட்கிழமை

மாணவர்களின் வருகை மிகக் குறைவு

Gavitha   / 2020 நவம்பர் 23 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய, இந்திக அருணகுமார

மூன்றாம் தவணைக்காக, இன்று (23), மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில், மாணவர்களின் வருகை 30 தொடக்கம் 40 சதவீதம் வரை மாத்திரமே பதிவாகியுள்ளது என, அதிபர்கள் தெரிவித்தனர்.  

பெரும்பாலான மாணவர்கள், பெற்றோருடன் தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கில்களில் வந்தனர் என்றும் ஒரு சில பாடசாலைகளில், பாடசாலை பஸ் சேவைகளும் மூலமும் வான்  சேவை மூலமும், மாணவர்கள் பாடசாலைக்கு வந்தனர் என்றும் தெரியவருகின்றது.

ஒரு வகுப்புக்கு, 15 மாணவர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டனர் என்றும் எனினும் அதிலும் குறைவான மாணவர்களே பாடசாலைக்கு வந்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

6ஆம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையான மாணவர்களை விட, உயர்தர மாணவர்களின் வருகையே குறைவாக இருந்தது என்றும் ஒரு சில உயர்தர வகுப்புகளில், ஒரு மாணவர் கூட இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மாணவர்களின் வருகை குறைவாக இருந்த போதிலும், 95 சதவீத ஆசிரியர் வருகை இருந்தது என்றும் வருகை தந்திருந்த மாணவர்களுக்கு மாத்திரம், இன்று (23) கற்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாத்தளை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும், மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளில், 5 சதவீத மாணவர்கள் வருகை தந்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X