Editorial / 2025 மே 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை-மஹியங்கனை வீதியில் 10,510 மில்லிகிராம் ஹெரோயின் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது என பதுளை பொலிஸ் பிரிவு குற்ற புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதுளையில் பிரபல தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த ஹெராயினை எடுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மூன்று சிறிய பொட்டலங்களில் பொதி செய்யப்பட்டிருந்த ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, ஹிகுருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
8 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago