2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மாணவர்கள், ஆசிரியர்களை பீதியடையச் செய்த சிறுத்தை

R.Maheshwary   / 2022 மார்ச் 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நோர்வூட்- போட்ரி தோட்டப் பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றில் சிறுத்தையொன்று தனது இரண்டு குட்டிகளுடன் ஏறியதால், மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்த சம்பவம் நோர்வூட்டில் பதிவாகியுள்ளது.

போட்ரி தோட்டத்தில் உலாவித் திரியும் குறித்த சிறுத்தை, தனது குட்டிகளுடன் இரைத் தேடி வந்து அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயற்சித்துள்ளது. எனினும் இதன்போது அங்கிருந்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டதால், குறித்த சிறுத்தை குட்டிகளுடன் பாடசாலைக்கு அருகிலிருந்த மரத்தின் மீது ஏறியுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு நோர்வூட் பொலிஸார் அறிவித்த நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து குட்டிகளுடன் சிறுத்தையை தேயிலைத் தோட்டத்துக்குள் துரத்தியுள்ளனர்.

அத்துடன் போட்ரி தோட்டத்தில் உலவும் இந்த சிறுத்தையை காட்டுக்கு துரத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் உறுதி வழங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X