2025 மே 15, வியாழக்கிழமை

மாணிக்கக் கல் அகழ்விற்கு சென்ற ஐவரில் ஒருவரைக் காணவில்லை

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

லுணுகலை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வுக்குச் சென்ற ஐவரில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

லுணுகலை எல்ரோட்- அடாவத்தைப் பகுதியில் இருந்து மூன்று நபர்களும் அடாவத்தைப் பகுதியைச் சேர்ந்த இருவருமாக ஐவர் பிட்டமாறுவ - தொரபொத்த  சிறிய உலக முடிவு பகுதிக்கு மாணிக்கக் கல் அகழ்விற்காக 26 ஆம் திகதி சென்றுள்ளனர். 

இதில் சுவர்ணராஜா என்ற நபர் இன்றுவரை வீடு திரும்பாததால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தனர். 

இதனையடுத்து இவருடன் சென்ற ஏனைய நால்வரையும் கட்டையைச் லுணுகலை பொலிஸார் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் காணாமல் போன நபரைத் தேடும் பணிகளில் லுணுகலை பொலிஸாரும் ஊர் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .