2025 மே 17, சனிக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞர் பலி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கெசல்கமுவஓயா வனப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை- டின்சின் நகரத்தைச் சேர்ந்த 22 வயதான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் மேலும் சிலருடன் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது, 3 மணியளவில் மாணிக்கக்கல் அகழ்ந்த குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த நிலையில், அவருடன் சென்றவர்கள்  பிரதேசவாசிகள் இணைந்து 2 மணிநேரம் போராடி, 20 ஆழத்தில் சிக்குண்டிருந்த இளைஞனை மீட்ட போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .