2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை, சென்.விஜயன்ஸ் தோட்டத்தில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட  இருவரை,  பொகவந்தலாவை பொலிஸார்,  இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவை  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்படிப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளதுடன்,  மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .