R.Maheshwary / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி- கொடவெல வீதியின் இரு புறங்களிலும் மாணிக்கக்கல் அகழப்படும் நடவடிக்கை, சப்ரகமுவ மாகாண ஆளுநரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
இந்த செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இரத்தினக்கல்அதிகார சபையின் தலைவர் விராஜ் சில்வாவுக்கு தொலைபேசி ஊடாக திங்கட்கிழமை (02) பணித்தார்.
குறித்த வீதியின் இரு புறங்களிலும் மாணிக்கக்கல் அகழப்படுவதால் வீதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டு வருவதை கருத்திற்கொண்டே மாகாண ஆளுநர் இவ்வாறு பணித்துள்ளார்.
இந்த வீதி 11 கோடி ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், வீதியின் இரு புறங்களிலும் பெகோ இயந்திரம் மூலம் மாணிக்கக்கல் அகழப்பட்டு வருவதால் வீதி சேதமடைந்து தற்போது பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தினக்கல் அதிகார சபையின் அனுமதியுடன் பெகோ இயந்திரத்தின் மூலம் அகழ்வு முன்னெடுக்கப்படுவதால் சேதமடைந்த வீதியை தமது சொந்த நிதியின் மூலம் சீரமைத்து தருவதாக உரிய அனுமதி பத்திரத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்படி வீதியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர், இரத்தினபுரி வீதி அபிவிருத்தி அதிகார சபை, இரத்தினபுரி மா நகர சபை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் இரண்டு பொறியிலாளர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026